Thursday, July 22, 2010

காலப்பொம்மை

நாம் உலகை வழிநடத்த
உருவாக்கியது ஊடகம்...
இன்று ஊடகம் வழிநடத்தும்
பொம்மைகளாய் நாம்...

நம் வீட்டு ஆனந்தையும்
சைனாவையும் பாராட்ட
மறுக்கின்றன நம் உதடுகள்...
ஜெர்மனி பிரேசில் காகாக்களை
பார்க்க நள்ளிரவிலும்
காத்திருக்கின்றன நம் கண்கள்...

"சிங்க"த்தையும் "சுறா"வையும்
பார்க்கத் துடிக்கும் நம் மனம்
வண்ணத்து பூச்சையும் காஞ்சிவரத்தையும்
மறந்தது ஏனோ...

அன்றைய ஆன்மிக மரங்களின் நிழலில்
தென்றலை சுவாசித்த நாம்
ஏனோ இன்று நாகங்களின் நிழலில்
ஒதுங்க நினைக்கிறோம்...